புதுக்கோட்டை மாவட்டம் மாஞ்சான் விடுதி காட்டுப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.மாஞ்சான்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட மலவராயன்பட்டி சுற்று வட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் ரோந்துப்பணி மேற்கொண்டதில் சிறுத்தை நடமாட்டத்திற்கான எந்த தடயமும் இல்லை.இருப்பினும் வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய வனத்துறையினர், சமூக வலைதளங்களில் தேவையற்று வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.