திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியை தேர்ந்தெடுத்து இண்டிகோ பெயிண்ட் நிறுவனம் வண்ணம் பூசும் பணியை மேற்கொண்டது. தானிப்பாடி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கூடுதல் கட்டடத்தில் இண்டிகோ சேவா Utsav திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வர்ணம் பூசும் பணி நடத்தப்பட்டது. இப்பணியில் ஈடுபட்ட உள்ளூர் தொழிலாளர்களுக்கு T-SHIRT, CAP உள்ளிட்டவை அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கும் திறன் சார்ந்த போட்டிகள் நடத்தி பரிசுப்பொருட்களை வழங்கப்பட்டன.