திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் செல்போனில் மூழ்கிய பெண் அதிகாரிகள், ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளையும், ரீல்ஸ் வீடியோக்களையும் பார்த்துக் கொண்டிருந்ததால் அங்கு வந்திருந்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர். அதில் பங்கேற்ற பெண் அதிகாரிகள் பலரும் ஒருவருக்கொருவர் பேசி சிரித்தபடியும், செல்போனில் மூழ்கியபடியும் இருந்தனர்.