ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா சேலத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர், நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்வது குறித்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.