தஞ்சாவூர் கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய கடற்படையின் சிம்பொனிக் இசைக்குழுவினரின் நிகழ்ச்சியை பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடியும், கைதட்டியும் ரசித்தனர். இந்திய கடற்படையின் 75-ஆம் ஆண்டை முன்னிட்டு, இளைஞர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாகவும், கடற்படை வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வகையிலும், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.