வங்கக் கடலில் உருவாகி வரும் ஃபெங்கல் புயல், அடுத்த ஓரிரு நாட்களில் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்திய கடற்படை தயாராக உள்ளது. அரசு மற்றும் சிவில் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குவது, வெள்ள நிவாரணக் குழுக்களை நிலைநிறுத்துவது என முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்காக டைவிங் குழுக்களையும், ஜெமினிஸ் மற்றும் ஹெலிகாப்டர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது.