கடந்த 9 மாதங்களாக சவுதி சிறையில் உள்ள கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சோலைமுத்து ராஜா என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக சவுதியில் ஆடுகளை ஏற்றி செல்லும் கனரக வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், வழக்கு ஒன்றில் சிக்கி கடந்த 9 மாதங்களாக சிறையில் உள்ள நிலையில், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.