சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.நாடு முழுவதும், 79ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் வெளியிட்ட 9 அறிவிப்புகளின் விவரம்;1. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.2.தியாகிகளின் குடும்பத்தினருக்கான மாதாந்திர ஓய்வூதியம் 12,000 ரூபாயாக உயர்த்தப்படும்.3.கட்டபொம்மன், வஉசி ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு நிதி உதவி 11,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.4.இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களுக்கு மாதாந்திர நிதி உதவி 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.5.இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய நிதி 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.6.முன்னாள் படை வீரர்களின் வசதிக்காக சென்னை மாதவரத்தில் 33,000 சதுர அடி பரப்பில் 22 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய தங்கும் விடுதி அமைக்கப்படும்.7.மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவு செய்யப்படும்.8.ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள், மாவட்ட அளவில் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.9.தமிழ்நாடு கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும் போது திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு 9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.