நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் எம்ஆர்சி ராணுவ மையம் மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எம்.ஆர்.சி. கமாண்டன்ட் கிரிஷ் நேந்து தாஸ், போர் நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.