நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், முதுமலை புலிகள் காப்பக கள துணை இயக்குநர் வித்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி பாகன்கள் யானை மீது அமர்ந்து வலம் வந்த நிலையில், பெம்மன், சந்தோஷ், காமாட்சி, பாமா, கிருஷ்ணன் ஆகிய யானைகள் தும்பிக்கையை உயர்த்தி மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தின. அதைத் தொடர்ந்து சந்தோஷ் என்ற யானையின் 55 வது பிறந்தநாளை கொண்டாடிய வனத்துறையினர், ராகி மாவில் செய்யப்பட்ட கேக்கை வெட்டி யானைக்கு ஊட்டினர். சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்து கண்டு ரசித்தனர்.