நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறிது நேரத்தில் மழை பரவலாக பெய்யத் தொடங்கிய நிலையில், பார்வையாளர்கள் மழையில் நனைந்தபடியே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.