நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணத்திற்கு காரணம் சிறுமிகள் கல்வி கற்காமல் இடைநிலை நின்று கர்பம் அடைவதாக ஆட்சியர் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கல்வி முக்கியத்துவம் இல்லைநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழக முதல்வர் காணொளி வாயிலாக 50 லட்சம் மதிப்பீட்டில் கால்பந்து விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில் நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் வருத்தப்படும் நிகழ்வாக மாவட்டம் முழுவதும் பெண்கல்வி முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது என்றும் அதிகளவில் குழந்தை திருமணம் நடைபெற்று வருவதால் குழந்தை பாக்கியம் பெரும் அளவிற்கு மாணவிகள் சென்று விடுவதாக தெரிவித்தார். இடைநிற்றலே காரணம்மேலும் மாணவ, மாணவிகள் கல்வியை இடைநிலையில் நிறுத்துவதால் இந்த மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தொடர்ந்து இந்த மாதிரியான செயல்களை முற்றிலும் மாற்றுவதற்கு உங்களைப்போல் விளையாட்டு வீரராக உருவாகி மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று நினைக்கிறேன் என்று கூறினார். Related Link முன்னாள் மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்