சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனை மருந்தகத்தில் காலாவதி மாத்திரை வழங்கியதாக கூறி, நோயாளி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். கடந்த 11ஆம் தேதி சிவா பகத்சிங் என்ற இளைஞர் வயிற்று வலி காரணமாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் சாப்பிட்ட சிவாவிற்கு வயிற்று வலி மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் மாத்திரையை பார்த்த போது அது காலாவதியானது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவா மருத்துவமனைக்கு சென்று மருந்தக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.