மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையில் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர். தொடர் விடுமுறையை ஒட்டி குற்றாலத்தில் காலை முதலே குவிந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்தனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.