நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து விநாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை ஆறாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.