புதுச்சேரி, காவேரி, ஏற்காடு உள்ளிட்ட 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், நாகர்கோவில் விரைவு ரயில், ஹைதராபாத் விரைவு ரயில், நாகர்கோவில் விரைவு ரயில், திருவனந்தபுரம் விரைவு ரயில், ஆலப்புழா விரைவு ரயில், மைசூரு காவேரி விரைவு ரயில், பாலக்காடு விரைவு ரயில் ஆகிய ரயில்கள் 4 பொதுப்பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன. மேலும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில், திருவனந்தபுரம் - அமிர்தா விரைவு ரயில், விழுப்புரம் - காரக்பூர் விரைவு ரயில், திருநெல்வேலி - புருலியா விரைவு ரயில், புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில்களும் 4 பொதுப்பெட்டிகளுடன் இயங்கவுள்ளன.