தேனியில், வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு, ஆயிரத்து 300 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 250 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியார் கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு ஆயிரத்து 600 கன அடியும், கிருதுமால் நதி பாசனத்திற்காக 650 கன அடியும் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.இதனையடுத்து பெரியார் பாசன கால்வாய் செல்லும் வழித்தடத்தில் உள்ள மக்களுக்கும், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.