திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ரேஷன் அரிசி கடத்துவதை வழக்கமாகக் கொண்ட பெண்ணிடம் பேரம் பேசும் வட்ட வழங்கல் அலுவலரின் ஆடியோ வெளியாகியுள்ளது. திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ரயில் முலம் கடத்தும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க வேண்டிய வட்ட வழங்கல் அலுவலர் ரேஷன் அரிசி கடத்தும் பெண்ணிடம் செல்ஃபோனில் பேசினார். அதில், வரும் 30 ஆம் தேதி வரை அரிசியை கடத்திக் கொள்ளலாம் என்றும், அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் பணம் கொடுத்தவர்கள் மட்டும் அரிசியை கடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : நியாய விலைக்கடையில் விலையில்லா ரேஷன் அரிசி விற்பனை... முறைகேடாக ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படும் வீடியோ