மேட்டூர் அணைக்கு 12 ஆயிரத்து 713 கன அடியாக இருந்த நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரத்து 710 கன அடியாக உயர்ந்தது. மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து உள்ளது. அதன்படி அணையின் நீர்மட்டம் 92.58 அடியாகவும், நீர் இருப்பு 55.54 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.