ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கொப்பரை தேங்காய் கொள்முதல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மெய்யழகன் என்பவருக்கு சொந்தமான மேரிகோ லிமிடெட் நிறுவனத்திற்கு சென்ற 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையடுத்து, நிறுவன நுழைவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.