திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக ஆங்காங்கே 10- க்கும் மேற்பட்ட இடங்களில் புதியதாக தற்காலிக நீர் வீழ்ச்சிகள் தோன்றி, பார்ப்பவர்களின் கண்களைக் கவர்கின்றன. மேலும், கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அருவிகளைக் கண்டு ரசித்து வருகின்றனர்.