தொடர் மழையால், தஞ்சை முக்கிய சாலைகளில், தீபாவளி பொருட்களை விற்க முடியாமல் தரைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூரில், கடந்த சில நாட்களாகவே கனமழை, விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால், தஞ்சை அண்ணா சாலை, காந்திஜி சாலை, கீழ ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான தரைக் கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் தார்ப்பாய் கொண்டு மூடுவதும், மழை நின்ற பின், வியாபாரத்தை தொடங்குவதாகவும், வியாபாரம் குறைவாக உள்ளது என்றும் தரைக்கடை வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.