ஓணம் பண்டிகை மற்றும் மீலாது நபியை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகை முதல் கேத்தி வரை சிறப்பு மலை ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.உதகையில் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ளதால், சிறப்பு மலை ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே அறிவித்தது.அதன்படி காலை 8.20 மணிக்கு குன்னூரிலிருந்து உதகைக்கும், மாலை 4.45 மணிக்கு உதகையிலிருந்து குன்னூருக்கும் இருமுறை மலை ரயில் இயக்கப்படும். உதகை - கேத்தி இடையே காலை 9.45 மணி, 11.30 மணி, மாலை 3.00 மணி என மூன்று முறை சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்படும்.அதன்படி காலை 9.45 மணிக்கு கேத்தியிலிருந்து உதகைக்கு துவங்கப்பட்ட சிறப்பு மலை ரயிலில், ஆர்வமுடன் பயணித்த சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு களித்தனர்.