செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. முன்னதாக, அலுவலகத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் சங்கக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர், அலுவலக திறப்பு மற்றும் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.