நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஒவ்வொரு பள்ளி மாணவரும் ஒரு மரக்கன்று நட்டு அதனை தன் பெற்றோர் பெயரிட்டு அழைத்தால் அவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டது.