வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் டார்லிங் குழுமத்தின் Park inn by ரேடிசன் நட்சத்திர ஹோட்டலை விஐடி வேந்தர் விஸ்வநாதன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். டார்லிங் குழும நிறுவனர் வெங்கடசுப்பு தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் டார்லிங் குழும நிர்வாகிகள் முரளி, நவீன், விஐடி துணை வேந்தர்கள் செல்வம், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு நவீன வசதிகளுடன் Park inn நட்சத்திர ஹோட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.