விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு குழந்தைகளின் விளையாட்டை கண்டு ரசித்தார். குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கிய அவர், அங்கன்வாடி மைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பயணிகள் நிழற்குடை, அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை, வேளாண்மை அலுவலகக் கட்டடம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.