வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர். பாதி வழியில் வழிமறித்து வாக்குவாதம் செய்த இருவர். தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்தி முகத்தை சிதைத்த கொடூரம். கொலையாளிகளை பிடிக்க வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ். சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட இரண்டு பேரை கையும் களவுமாக பிடித்து விசாரணை. தனியார் நிறுவன ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?முட்புதருக்குள் கிடந்த சடலம்19ம் தேதி நைட்டு. கிருஷ்ணாபுரம் பகுதி வழியா பொதுமக்கள் சிலர் பைக்ல போய்ட்டு இருந்தாங்க. அப்ப சாலையோரத்துல உள்ள முட்புதர்ல, முகம் சிதைஞ்ச நிலையில ஒருத்தரோட சடலம் கிடந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச பொதுமக்கள் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் சடலம் கிடந்த இடத்த வந்து பார்வை இட்டுருக்காங்க. உயிரிழந்து கிடந்த நபர் யாருன்னு தெரிஞ்சுக்க அந்த பகுதியில உள்ள கிராம மக்கள் கிட்ட விசாரிச்சுருக்காங்க போலீஸ். அதுல தான் உயிரிழந்தது செக்கடிக்குப்பம் பகுதியை சேந்த வேலுன்னு தெரியவந்துச்சு. இந்த வழக்கு தொடர்பா தனிப்படை அமைச்ச போலீஸ், கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து பாத்துருக்காங்க. ஆனா போலீஸ்க்கு எந்த ஒரு துப்பும் கிடைக்கல.சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரிடம் விசாரணைஇதுக்கிடையில போலீசார் சிப்காட் தனியார் திரையரங்கம் சந்திப்புல ரோந்து பணியில் ஈடுபட்டிருக்காங்க. அப்ப அந்த வழியா பைக்ல வந்த ரெண்டு பேர், போலீச பாத்ததும் திருதிருன்னு முழிச்சுருக்காங்க. ரெண்டு பேரும் சந்தேகத்திற்கு இடமா நடந்துக்கிட்டதால அவங்கள பிடிச்சு விசாரணை பண்ணிருக்காங்க. அப்ப அவங்க முன்னுக்கு பின் முரணா பதில் அளிச்சதா கூறப்படுது. இதனால ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்டு போய் விசாரிச்சுருக்காங்க. அதுல தான் வேலு கொலை செய்யப்பட்டதுக்கான காரணம் தெரியவந்துச்சு. தகாத உறவில் இருந்த ரேணுவின் மனைவிராணிப்பேட்டையில உள்ள செக்கடிக்குப்பம் கிராமத்த சேந்த ரேணுவுக்கு கல்யாணமாகி மணிகண்டன்னு ஒரு மகன் இருக்கான். மணிகண்டன் சென்னையில உள்ள ஒரு கல்லூரியில முதலாமாண்டு படிச்சுட்டு இருக்கான். இதுக்கிடையில ரேணுவோட மனைவியும் அதே கிராமத்த சேந்த வேலுவும் நட்பா பழக ஆரம்பிச்சுருக்காங்க. இந்த பழக்கமே அவங்களுக்குள்ள தகாத உறவா மாறிருக்கு. ஆனா இந்த விஷயத்த தெரிஞ்சு கடும் கோபமான ரேணு, மனைவிய கண்டிச்சுருக்காரு. கல்லூரி படிக்குற வயசுல மகன வச்சுக்கிட்டு, நீ எதுக்கு வேலு கூட பேசிட்டு இருக்க, உன்னோட இந்த கேடு கெட்ட செயல் நம்ம மகனோட எதிர்காலத்தையே பாதிச்சிரும்ன்னு திட்டிருக்காரு. அதே மாதிரி வேலுவுக்கும் ஃபோன் பண்ண ரேணு, எதுக்கு என் மனைவி கூட பழகிட்டு இருக்க, உன்னால என் குடும்பத்தோட நிம்மதியே போய்ருச்சு, இனிமே என் மனைவி கூட பழகாத, இது தான் உனக்கு கடைசி வார்னிங், இதுக்கப்புறமும் நீ என் மனைவி கிட்ட பேசுனனா உன்னை உயிரோடைய விடமாட்டேன்னு மிரட்டிருக்காரு. இதனால ஃபோன்லையே ரெண்டு பேருக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. ரெண்டு பேரும் ஃபோன்லையே மாறி மாறி தகாத வார்த்தையால திட்டிக்கிட்டாங்க. ஆனா இவ்ளோ பிரச்னை நடந்தும் ரேணுவோட மனைவியும், வேலுவும் தொடர்ந்து பேசிப் பழகிட்டு தான் இருந்தாங்க. இதனால கடும் கோபமான கணவன், நடந்த எல்லாத்தையும் தன்னோட மகன் கிட்ட சொல்லி வேலுவ கொலை பண்ண திட்டம் போட்ருக்காங்க.ரேணு மற்றும் மணிகண்டனை கைது செய்த போலீஸ்சம்பவத்தன்னைக்கு வேலு வேலைக்கு போய்ட்டு பைக்ல வீட்டுக்கு திரும்பிட்டு இருந்தாரு. அப்ப கிருஷ்ணாபுரம் பகுதியில வச்சு வேலுவ வழிமறிச்சு வாக்குவாதத்துல ஈடுபட்டிருக்காங்க ரேணுவும் அவரோட மகனும். என் மனைவி கூட பேசக்கூடாதுன்னு உன் கிட்ட பலமுறை சொல்லிட்டேன், ஆனா ரெண்டு பேருமே கேட்குற மாதிரி தெரியலன்னு சண்டை போட்ருக்காரு. அத கேட்ட வேலு, பதிலுக்கு ரேணுவையும், அவரோட மகனையும் தகாத வார்த்தையால திட்டிருக்காரு. இதனால கடும் கோபமான அந்த ரெண்டு பேரும் மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்து வேலுவோட கை, கால், வாய், முகம்ன்னு எல்லா இடங்களையும் வெட்டி கொன்னுருக்காங்க. அடுத்து சடலத்த பக்கத்துல உள்ள முட்புதர்ல தூக்கி வீசுன ரெண்டு பேரும் அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிடட் போலீஸ் ரெண்டு பேரையும் பிடிச்சு சிறைக்கு அனுப்பிட்டாங்க. Related Link கடலில் கரை ஒதுங்கிய குழந்தை சடலம்