தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள பழவாற்றில் புதர் மண்டியுள்ளதால் அதனை அப்புறப்படுத்தி, தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அருகே கூனஞ்சேரி கிராமத்தில் பழவாறு வாய்க்கால் தொடங்கி பாபநாசம், சுவாமிமலை, திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை வழியாக சுமார் 60 கிலோமீட்டர் கடந்து கடலில் கலக்கிறது. இந்நிலையில், வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதால், அதில் ஆகாய தாமரை செடிகளும், ஆளுயர கோரை புற்களும் வளர்ந்து முட்புதர்களாக காணப்படுவதால் நீரோட்டம் தடைபட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.