மழைச்சாரல் ஒருபுறம், வெயில் ஒரு புறம் என காலை முதல் நிலவி வந்த வானிலையில், திடீரென வானவில் தோன்றி ரசிக்க வைத்தது. கடந்த இரண்டு நாட்களாக, மதுரையில் பலத்த மழை பெய்து வந்த நிலையில், காலை முதலே சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. பிற்பகலில், சாரல் மழை பெய்து தொடங்கியது. இந்நிலையில், மதுரையின் புறநகர் பகுதியான யானைமலை ஒத்தக்கடை பகுதியில், சாரல் மழை பெய்யும் போது, வானில் தோன்றிய வானவில், வர்ணஜாலம் காட்டியது.வானவில்லும் யானை மலையும் ஒரு சேர சாரல் மழையை காணும் போது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.