சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரயில்வே போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்ற கிமேனை (key man) விடுவிக்க கோரி, ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூடியூர்- பரமக்குடி இடையே தண்டவாளத்தில் பொருத்துப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கிளிப்புகள் கழன்று கீழே கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்கு வேலை செய்து வந்த கி மேன் செந்தில்குமார் என்பவர், இதனை பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, இந்த நாசவேலைக்கு யார் காரணம்? என்ற கோணத்தில் செந்தில்குமாரை அழைத்து சென்று ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.