சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் பெய்த மழை காரணமாக, வாடிக்கையாளர் வரத்து குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 100-க்கும் அதிகமான வியாபாரிகள் 1000 ரூபாய் தின வாடகை கொடுத்து வியாபாரம் செய்து வரும் நிலையில், காய்கறிகள் விற்பனையாகமல் வீணாவதாக தெரிவித்தனர்.