கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில், காய்ச்சி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கல்வராயன் மலையில் உள்ள தாழ்கெண்டிக்கல் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், மெத்தை வீடு ஒன்றில் விற்பனைக்காக கள்ளச்சாராயம் காய்ச்சி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அங்கிருந்து சாராயம் காய்ச்ச தேவைப்படும் மூலப் பொருளான 700 கிலோ வெல்லம், விஷ நெடி கொண்ட நான்கரை லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். பெருமாள் மற்றும் தயாளமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.