சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட மூன்று பேரில் ஒருவனை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவர், இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, அவரை தரதரவென இழுத்து மூன்று இளைஞர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.