கும்பகோணத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ரபீஸ் தங்கும் விடுதியில் கடந்த ஜூலை மாதம் பூம்புகாரை சேர்ந்த கல்லூரி மாணவன் மற்றும் மன்னார்குடியை சேர்ந்த மாணவியும் சேர்ந்து அறை எடுத்து தங்கினர். அப்போது மாணவிக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததையடுத்து விடுதி நிர்வாகத்திடம் வட்டாட்சியர் விளக்கம் கேட்டார். இதற்கு எவ்வித விளக்கமும் அளிக்காத விடுதி நிர்வாகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு கடந்த 4ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் வட்டாட்சியர் சண்முகம் சீல் வைத்தார்.