மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்பம் நடத்துவதற்கு வருமானம் போதுமானதாக இல்லை எனக்கூறி மனைவி சந்தியா அம்மா வீட்டிற்கு சென்றதால் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த அருள்குமார் அவரை கொலை செய்தார்.