ஈரோட்டில் பச்சிளம் குழந்தையை விற்பனை செய்த விவகாரத்தில், மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு சந்தோஷ்குமாருக்கும், தஞ்சாவூர் நித்யாவுக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் பிறந்த குழந்தையை இடைத்தரகர்கள் மூலம் விற்றனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கணேசனை போலீஸார் கைது செய்தனர்.