தென்காசி மாவட்டத்தில், ஆயிரத்து 20 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒரு லட்சமாவது வீட்டையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். அதன் விவரம்; தென்காசி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.15 கோடியில் 11 புதிய குடியிருப்புகள்.தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 கோடி செலவில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள்.சிவ சைலத்தில் உள்ள கடனா அணை ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும்.அடவி நயினார் அணை திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் அணைக்கட்டு, கால்வாய், குளங்கள் சீரமைக்கப்படும்.ரூ.52 கோடி மதிப்பீட்டில், தென்காசி மாவட்டத்திற்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள மாறாந்தை கால்வாய் ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படும்.வரட்டாறு ரூ.4 கோடி செலவில் தூர் வாரப்படும். தென்காசி விகே புதூர் 6ஆம் கால்வாய் சீரமைக்கப்படும்.தென்காசியில் ரூ.12 கோடியில், கண்மாய்கள் சீரமைக்கப்படும்.கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம் கட்டி தரப்படும்.இவ்வாறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. இதை கேளுங்கள்... 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் | CM Stalin speech | Tenkasi