நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 194 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். டிஜிபி தலைமையில் நெல்லையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா தொடர்பாக 985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.