ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களிடம் பரிகார பூஜைகள், தீர்த்தம் வழங்குவதற்கு புரோகிதர்கள் சில ஆயிரங்கள் துவங்கி, லட்சம் ரூபாய் வரை அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு வசூல் செய்யும் பணத்தை கோவில் அதிகாரிகள் பிரித்து கொள்வதாக கூறப்படும் நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.