அரசியலில் எடுத்தோம்; கவிழ்த்தோம் என செய்வது தம்முடைய பழக்கம் இல்லை என்று வி.கே. சசிகலா கூறினார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தம்மைப் பற்றி அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களுக்கு தெரியும் என்றும், தான் எப்படி டீல் செய்வேன் என்று அவர்களுக்கு தெரியும் எனவும் கூறினார். தம்முடைய நகர்வு தனியாக தான் இருக்கும் என்றும், ஆனால் அது தனியாக தெரியும் எனவும் சசிகலா கூறினார்.