மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சியின் முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஒத்தக்கடையை சுற்றிலும் அமைச்சரை வரவேற்க செய்யப்படும் ஏற்பாடுகளை கழுகு பார்வை காட்சியில் பிரத்தியேகமாக காணலாம்.இந்த நிகழ்ச்சியில் 11,500 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா, 2000 நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கபடுகிறது. இந்நிலையில், பயனாளிகள் அமரக்கூடிய பகுதி, அரசு அதிகாரிகள் அமரக்கூடிய பகுதி என அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக அமைக்கப்பட்டு வருகிறது.