தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கோம்பேரி கிராமத்தில், சாலை வசதி இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்வோரும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோம்பேரி கிராமத்திற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே சாலை வசதி உள்ளது. மீதமுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரம், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால், சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடும் சாலையில் மிகுந்த சிரமத்துடன் பயணித்து வரும் மக்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.