ரம்ஜான் பண்டிகைக்கு இரு நாட்களே உள்ள நிலையில் ஆட்டுச் சந்தையில் கோவை மாவட்டம், அன்னூர் அதன் சுற்று வட்டாரகிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் அன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ரம்ஜான் பண்டிகைக்கு இரு நாட்களே உள்ள நிலையில், வார இறுதி நாளான இன்று, அன்னூர் சந்தையில் அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு, மலையாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றனர்.