நாகை அருகே மார்க்சிஸ்ட் அலுவலகம் முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றியதால், இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். பெருங்கடம்பனூர் பகுதியில் தவெக சார்பில் சிபிஎம் கட்சி அலுவலகம் அருகே கொடியேற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு சிபிஎம் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியது. இதில் படுகாயம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவரின் கணவரான மாரிமுத்து, சிபிஎம் நிர்வாகிகள் இளங்கோ, துரை ஆகியோர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.