திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இணைப்பு கொக்கி உடைந்து, இன்ஜின் தனியாகவும் பெட்டிகள் தனியாகவும் பிரிந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் மீஞ்சூர் அருகே வரும் போது திடீரென இன்ஜினுக்கும் பெட்டிகளுக்கும் இடையே உள்ள கொக்கி உடைந்தது. இதனால் அந்த தண்டவாளம் வழியே சென்னை செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிப்படைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே ஊழியர்கள் மற்றொரு இன்ஜினை வரவழைத்து பெட்டிகளை வேறு இடத்திற்கு எடுத்து சென்றனர்.