கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த திமுக, நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட இதுவரை நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுக்குழுவில் குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக் என அனைத்து துறைகளிலும் திமுக அரசு ஊழலில் திளைப்பதாக கடுமையாக சாடினார். மேலும், தேர்தலுக்கு முன்பே எத்தனை அமைச்சர்கள் உள்ளே போவார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.