சென்னையில், சுற்றுலா தலங்களை கண்டு களிக்கும் வகையில் ”சென்னை உலா” என்ற பெயரில் விண்டேஜ் பேருந்துகளின் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். 50 ரூபாய் கட்டணத்தில் மெரினா, எழும்பூர் அருங்காட்சியகம் என மாநகர் முழுவதும் உள்ள 17 சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் அரை மணி நேர இடைவெளியில், இந்த பேருந்துகள் இயக்கப்படும். கொடி அசைத்து துவங்கிய பயணம்சென்னை, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, ’சென்னை உலா’ பாரம்பரிய பெருமை மாறாத வின்டேஜ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.அரை மணி நேர இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும் சென்னை நகரத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களான சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா, விவேகானந்தர் இல்லம், மைலாப்பூர் லஸ் கார்னர், அண்ணா மேம்பாலம், எழும்பூர் ரயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட 17 இடங்களில் சென்னை உலா பேருந்துகள், வாரம் முழுவதும் இயக்க திட்டமிட்டுள்ளனர். அரை மணி நேர இடைவெளியில் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில், சென்னை மாநகரின் புராதான சின்னங்கள் மற்றும் முக்கிய இடங்கள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு நிறுத்தங்கள் வருவதற்கு முன்பாக அந்த வரலாறுகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.இதையும் பாருங்கள் - பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து