நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேக்கரியில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டணம் பகுதியில் இயங்கி வரும் ஐயங்கார் பேக்கரியில், காலை முதலே கள்ளச்சந்தையில் அமோகமாக மதுவிற்பனை நடைபெற்றது. டாஸ்மாக் கடையில் 180 ரூபாய்க்கு விற்கப்படும் பீர் பாட்டில்கள் இங்கு 250 ரூபாய்க்கு கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதோடு, அவை வெளியே தெரியாமல் இருப்பதற்காக செய்தித்தாளில் சுற்றி மறைத்து வழங்கப்படுகின்றன. இதே போல் புதுப்பாளையம் பகுதியில் அரசு மதுபானக் கடைக்கு அருகிலேயே கள்ளச்சந்தையில் மதுவிற்கும் இளைஞர்கள், தங்களிடம் குவாட்டர் வாங்குவோருக்கு சைட் டிஷ்ஷுக்கான தின்பண்டங்களை இலவசமாக வழங்குவதாக கூறப்படுகிறது.