காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்டாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், பழனி அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்து,அவரிடமிருந்து 326 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பெத்தநாயக்கன்பட்டியில் போலீஸார் சோதனை செய்த போது மணிகண்டன் என்பவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.